தேர்தல் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் மாகாணசபை தேர்தல் நடைபெறும் - நளிந்த ஜயதிஸ்ஸ!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Nalinda Jayatissa
Thamilini
2 hours ago
மாகாணசபைத் தேர்தல் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் நிச்சயம் தேர்தல் நடத்தப்படும் என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசி அலவதுவல நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், “மாகாணசபைத் தேர்தல் குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆராய்ந்து வருகின்றது. மாகாணசபைத் தேர்தல் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன் மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவோம்.” என்றார்.
அதேவேளை, மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே