சுவிற்சர்லாந்தின் இஸ்லாமியப் பெண்களுக்கு எதிராக பாயும் சட்டம்!

#Switzerland #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
சுவிற்சர்லாந்தின் இஸ்லாமியப் பெண்களுக்கு எதிராக பாயும் சட்டம்!

சுவிட்சர்லாந்தில் புர்கா அணிந்ததற்கான முதல் அபராதம் தேசிய அளவில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது 2026 முதல், பொது இடங்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகளைத் தடை செய்யும் புதிய சட்டத்தை சுவிட்சர்லாந்து அமல்படுத்தத் தொடங்கியது. 

இந்தச் சட்டத்தின் கீழ், பொது இடத்தில் புர்கா அணிந்த ஒரு இஸ்லாமியப் பெண் முதன்முதல் அபராதம் பெற்றவர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

இந்த சட்டம் புர்கா, நிகாப் உள்ளிட்ட முகமூடிகள் மற்றும் சில போராட்டங்களில் பயன்படுத்தப்படும் முகமறைப்பு சாதனங்களையும் உள்ளடக்கியது. 

அபராதம் விதிக்கப்பட்ட அந்தப் பெண் அந்த தண்டப்பணத்தை செலுத்த மறுத்ததால், வழக்கு தற்போது பிராந்திய அதிகாரிகளின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கடுமையான அல்லது மீண்டும் மீண்டும் விதிமீறல் நடந்தால், அபராதம் 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை உயரக்கூடும் என அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4