இலங்கையை சேர்ந்த 232 சிவப்பு அறிவிப்பு சந்தேக நபர்கள் வெளிநாடுகளில் பதுங்கியுள்ளனர் - அமைச்சர் ஆனந்த விஜேபால

#SriLanka #Parliament #Minister #Lanka4 #Foriegn #Criminal #L4
Prasu
3 hours ago
இலங்கையை சேர்ந்த 232 சிவப்பு அறிவிப்பு சந்தேக நபர்கள் வெளிநாடுகளில் பதுங்கியுள்ளனர் - அமைச்சர் ஆனந்த விஜேபால

இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்ட 232 குற்றவாளிகள் பல்வேறு நாடுகளில் பதுங்கியிருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அவர்களில் 96 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் 37 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இனங்காணப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 20 மாதங்களில், சிவப்பு அறிவிப்புகளுக்கு உட்பட்ட 23 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் சிவப்பு அறிவிப்புகள் இல்லாத மேலும் 35 சந்தேக நபர்களும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4