தமிழ் தேசிய பேரவை விஜய்யை சந்தித்தது சுயலாப அரசியலுக்காகத்தான் - டக்ளஸ் தேவானந்தா விமர்சனம்!

#SriLanka #Douglas Devananda #Gajendrakumar Ponnambalam #Vijay #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
தமிழ் தேசிய பேரவை விஜய்யை சந்தித்தது சுயலாப அரசியலுக்காகத்தான் - டக்ளஸ் தேவானந்தா விமர்சனம்!

தென்னிலங்கையில் ஆட்சிக்கு வருகின்ற யாருமே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தரமாட்டார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அத்துடன் தமிழ் தேசிய பேரவை தமிழக முதலமைச்சரை சந்தித்தது சுயலாப அரசியலுக்காகத்தான் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  எமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான சூழலை நாமே உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

மேலும் மாகாணங்களை அடிப்படையாக கொண்ட அதிகார பகிர்வை வலுப்படுத்தி முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.  அதற்கே இந்தியாவின் அனுசரனையும் இருக்கும்.

 ஆனால் தற்போது, சிலர் தமிழக தலைவர்களை சந்தித்து சர்வதேச விசாரணை, சமஸ்டி என்று சயலாப அரசியலை முன்னெடுக்கின்றனர். அவை எமது மக்களுக்கு எந்த நன்மைகளையும் பெற்றுத்தராது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4