இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே கையெழுத்தான 5 ஒப்பந்தங்கள்

#India #Newzealand #government #LANKA4 #Agreement #L4
Prasu
3 months ago
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே கையெழுத்தான 5 ஒப்பந்தங்கள்

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையில் பாதுகாப்பு, சுற்றுலா உட்பட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நியூசிலாந்து சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லக்சன் இடையே தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இதையடுத்து, பாதுகாப்பு, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம், சுற்றுலா, விளையாட்டு, பேரிடர் மேலாண்மை ஆகிய ஐந்து துறைகளில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைகளுக்கு இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் தொடர்பான ஆராய்ச்சி, புத்தாக்கம், சிறந்த நடைமுறைகளை பரிமாறிக் கொள்ளுதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் இத்துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!