சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக குற்றச்சாட்டு - ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் கைது!
ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த உறுப்பினர் உள்ளூராட்சி உறுப்பினர் எவ்வாறு அந்தத் துப்பாக்கியைப் பெற்றார் என்பதைக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த ஆயுதம் ஏதேனும் குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்டதா என்பதையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள், தென் மாகாணப் பொறுப்பு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) கித்சிறி ஜெயலத் மற்றும் காலி மாவட்ட குற்றப்பிரிவின் பணிப்பாளர், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் (ASP) நமல் பெரேரா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே