சாவகச்சேரியில் பழமையான மருதமரத்தை தறிக்க முடிவு: சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு
#SriLanka
#Tree
#LANKA4
#Chavakachcheri
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 month ago
குறித்த மரத்தை தறிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கிறீன்லேயர் அமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விரைவான நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். வீதியில் செல்லும் மக்களுக்கு அருகிலுள்ள கடை மறைப்பதாக கூறப்பட்டு, மரத்தை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், மரம் பழமையானது என்றும், கடை புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டும் சமூக ஆர்வலர்கள், கடை அமைக்கும் போதே மரத்தை பாதுகாக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், கட்டுமானம் முடிந்த பின்னர் மரத்தை தறிப்பது நியாயமான நடவடிக்கை அல்ல என சமூக ஆர்வலர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே