ஹோமாகமவில் சோகம்: ஹெல்மட் தொழிற்சாலையில் பரவிய தீயில் சிக்கி 5 பேர் பலி!
#SriLanka
#LANKA4
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 month ago
ஹோமாகம - கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று (21) காலை ஏற்பட்ட தீப்பரவலில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலையொன்றிலேயே இன்று தீப்பரவல் ஏற்பட்டது.
தீப்பரவலை கட்டுப்படுத்த, கோட்டே மற்றும் தெஹிவளை மாநகர சபைகளிலிருந்து ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன.
இந்தநிலையில், குறித்த தொழிற்சாலையிலிருந்து 5 பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தற்போது தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே