இந்தியாவில் நீர்மின் திட்ட சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 10 பேர் மரணம்

#India #Death #Lanka4 #Rescue #Mine #Missing #Workers #collapse #L4
Prasu
4 hours ago
இந்தியாவில் நீர்மின் திட்ட சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 10 பேர் மரணம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், கட்டுமானத்தில் இருந்த ஒரு நீர்மின் திட்டத்தில், எரிவாயு வெடிப்பு காரணமாக சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த சிக்கிய 17 தொழிலாளர்களை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இமயமலைப் பகுதியில், பூட்டான் மற்றும் திபெத் எல்லையருகே உள்ள சமர்துங் கிராமத்தில், இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

அரசுக்குச் சொந்தமான தேசிய நீர்மின் சக்தி கழகத்தின் (NHPC) 500 மெகாவாட் திட்டத்திற்காக, டீஸ்டா ஆற்றின் மீது பல தொழிலாளர்கள் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். 

சுரங்கப்பாதையில் உள்ள பாறைகளில் சிக்கியிருந்த அல்லது புதைந்திருந்த மீத்தேன் வாயு என சந்தேகிக்கப்படும் வாயு திடீரென வெளியேறியதே இந்த வெடிப்புக்குக் காரணம் என்று NHPC ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், "இதுவரை 10 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் 17 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது," என்று உள்ளூர் காவல்துறைத் தலைவர் சோனம் டோல்மா குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4