ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மீது விசாரணை!

#SriLanka #Mahinda Rajapaksa #Investigation
Soruban
6 hours ago
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மீது விசாரணை!

ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்து, அவர்களைத் தனது தனிப்பட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, இந்த விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக காரியவசம் நேற்று ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.

இருப்பினும், அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகவில்லை என்றும், தனது வருகையின்மைக்கான எந்தக் காரணத்தையும் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவில்லை என்றும் ஆணைக்குழு கூறியுள்ளது.

அரச ஊழியர்களைத் தனிப்பட்ட அல்லது அரசியல் நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்துவது ஊழல் குற்றமாகக் கருதப்படும் நிலையில், அது தொடர்பான கையூட்டல் சட்டத்தின் விதிகளின் கீழ் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4