ஒரே நபருடன் திருமண வாழ்க்கை: மூன்று சகோதரிகளின் வினோத முடிவு

#India #LANKA4 #Marriage #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
ஒரே நபருடன் திருமண வாழ்க்கை: மூன்று சகோதரிகளின் வினோத முடிவு

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஒரே இளைஞரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்துகொண்டதாக வெளியாகிய தகவல் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சரோஜ், சாவித்ரி மற்றும் சந்தோஷி என்ற மூன்று சகோதரிகளும், ஒரே இளைஞரைத் திருமணம் செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

அதன்படி, அப்பகுதியில் உள்ள சாமுண்டா கோயிலில் நடைபெற்ற திருமண நிகழ்வில் மூவரும் அந்த இளைஞருடன் திருமண பந்தத்தில் இணைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

திருமணச் சடங்குகள் இந்து மரபின்படி நடைபெற்றதாகவும், அக்னியை வலம் வந்து, குங்குமம் அணிந்து, பெரியோரின் ஆசீர்வாதம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த திருமணத்தின் காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இது ஆரம்பத்தில் விளம்பர நோக்கில் உருவாக்கப்பட்ட காட்சிகள் என பலர் கருதினர்.

ஆனால், பின்னர் திருமணத்தில் பங்கேற்றவர்கள் மற்றும் திருமணமான நால்வரும் வெளியிட்ட காணொளிகள் மூலம், திருமணம் உண்மையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் வெளியாகி வருவதுடன், பல்வேறு விவாதங்களுக்கும் வழிவகுத்துள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!