ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரான்சிலிருந்து செல்ல முயன்ற நான்கு புலம்பெயர்வோர் மரணம்

#Death #FRANCE #LANKA4 #migrants #Boat #L4
Prasu
1 month ago
ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரான்சிலிருந்து செல்ல முயன்ற நான்கு புலம்பெயர்வோர் மரணம்

பிரான்சிலுள்ள டூன்க்ரிக் துறைமுகம் அருகே சிறிய ரப்பர் படகு ஒன்று புறப்படுவதைக் கண்டதாக பிரான்ஸ் கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர். 

சிறிது நேரத்திற்குள், அந்த படகில் மூன்று பெண்கள் சுயநினைவிழந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக அவர்களை மீட்டு கரைக்குக் கொண்டுவந்து, அவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்த போதிலும் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அவர்கள் மூவரும் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் அவர்கள் சுமார் 30, 40 மற்றும் 50 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டேன்ஸ் என்னுமிடத்தில், மற்றொரு புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது அவரது படகில் பழுது ஏற்பட, அவரும் பலியாகியுள்ளார்.

ஆகவே, இன்று ஒரே நாளில் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது புலம்பெயர்வோர் நான்கு பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!