நுவரெலியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் 3,951 பேர் பாதிப்பு

#people #NuwaraEliya #LANKA4 #Flood #Rescue #Missing #L4
Prasu
1 month ago
நுவரெலியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் 3,951 பேர் பாதிப்பு

நுவரெலியா மாவட்டம் முழுவதும் தற்போது மழைப்பொழிவு குறைந்து ஒப்பீட்டளவில் சீரான காலநிலை நிலவி வருகிறது. 

எனினும், மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மேகமூட்டமான சூழ்நிலை நிலவுவதுடன் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் மொத்தமாக 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, 20 நலன்புரி முகாம்களில் 523 குடும்பங்களைச் சேர்ந்த 2,195 பேர் தொடர்ந்து தங்கியுள்ளனர்.

இது தவிர, உறவினர்களின் வீடுகளில் 224 குடும்பங்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!