வான்பாயும் மட்டத்தை நெருங்கும் காசல்ரீ – மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்கள்!
காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் இன்று (10) காலை வான்பாயும் மட்டத்தை நெருங்கியுள்ளதாக, குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், வான் கதவுகள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மஸ்கெலியா ஓயா ஆற்றின் இரு மருங்கிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மின் உற்பத்தி நிலையங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீரேந்து பகுதிகளில் தற்போது பெய்துவரும் பலத்த மழை காரணமாகவே நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வான்பாயும் மட்டத்திற்கு 1.2 அடி வரை நெருங்கியுள்ளதுடன், கடந்த 24 மணிநேரத்தில் அப்பகுதியில் 25 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதேவேளை, மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வான்பாயும் மட்டத்திற்கு 3.4 அடி வரை நெருங்கியுள்ளதுடன், கடந்த 24 மணிநேரத்தில் 29 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்த்தேக்கப் பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
⚠️ ஆற்றங்கரையோர மக்களுக்கு அவதான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே