ரூ.56 மில்லியனில் பிரமந்தனாறு மகா வித்தியாலயத்திற்கு நவீன ஆய்வுகூடம்!

#SriLanka #School #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
ரூ.56 மில்லியனில் பிரமந்தனாறு மகா வித்தியாலயத்திற்கு நவீன ஆய்வுகூடம்!

கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தின் நவீன ஆய்வுகூட கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்றைய தினம் 11.08.2026 பள்ளி முதல்வர் பெருமாள் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. 

கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது .

குறித்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன் ,வடமாகாண கல்விப்பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன், கிளிநொச்சி வடக்கு வலய கல்விப் பணிப்பாளர் க.அ சிவனருள் ராஜா பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கிராம சேவையாளர் கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர் 

குறித்த பாடசாலையில் இதுவரை காலமும் ஆய்வு கூட வசதிகள் இன்றி பல மாணவர்கள் வேறு பாடசாலையில் கல்வி கற்று வந்த நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் துரித நடவடிக்கையின் மூலம் குறித்த கட்டிடம் அமையப் பெற உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும் 

வணக்கம் வாங்க கட்டடத்திற்கான நிதி பங்களிப்பானது மாகாண கல்வி நிதி ஒதுக்கீட்டிற்கு 56 மில்லியன் ரூபாய் செலவில் புதிய நவீன வசதிகள் கூடிய மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதற் காக கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு நடைபெற்றது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4