லண்டனில் பொலிஸார் நடத்திய திடீர் சோதனையில் 90 வாகனங்கள் பறிமுதல்

#Police #luxury vehicle #Lanka4 #London #England #L4
Prasu
2 hours ago
லண்டனில் பொலிஸார் நடத்திய திடீர் சோதனையில் 90 வாகனங்கள் பறிமுதல்

லண்டன் முழுவதும் பொலிஸார் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் 8 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான மதிப்புள்ள 90 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காப்பீடு இல்லாத மற்றும் சமூக விரோத வாகன ஓட்டுதலுக்கு எதிராக பொலிஸார் இந்த திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதில் 3.7 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள அரிதான ஃபெராரி மான்சா SP2 காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஹைட் பார்க், கென்சிங்டன் மற்றும் செல்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்த சோதனை நடவடிக்கையில் 120 பொலிஸார் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4