யாழ்ப்பாணத்தில் 3 மாதங்களில் 80 உயிரிழப்புகள்: வடக்கு ஆளுநர் வேதநாயகன் கவலை!

#SriLanka #Jaffna #Death #Governor #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
யாழ்ப்பாணத்தில் 3 மாதங்களில் 80 உயிரிழப்புகள்: வடக்கு ஆளுநர் வேதநாயகன் கவலை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 80 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை தொடர்பில் வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் கடும் கவலை தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை உடனடியாகக் கட்டுப்படுத்த கல்வி, சுகாதாரம், பொலிஸ், நிர்வாகம், ஆன்மீகம் மற்றும் ஊடகத்துறைகளை இணைத்து மாகாண மட்டத்திலான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உயிரிழப்பு வீதம் தேசிய சராசரியை விட அதிகமாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுப்பழக்கம், குடும்ப வன்முறை, உறவுகளுக்கிடையிலான தொடர்பாடல் குறைபாடு, தனிமை மற்றும் உளவியல் அழுத்தங்கள் முக்கிய காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஆபத்தான நிலையில் உள்ளவர்களை தொடர்ச்சியாக கண்காணிக்கும் பொறிமுறையை உருவாக்கவும், பல்வேறு திணைக்களங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4