அமெரிக்காவில் ஒரே நாளில் 3 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை

#America #LANKA4 #President #execute #2025 #2026 #L4 #DonaldTrump
Prasu
2 months ago
அமெரிக்காவில் ஒரே நாளில் 3 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை

அமெரிக்காவில் ஒரே நாளில் மூன்று பேர் தூக்கிலிடப்பட்டு 16 ஆண்டுகள் ஆகிறது, ஆனால் வியாழன் அன்று, வெவ்வேறு அமெரிக்க மாநிலங்களில் கொலைக் குற்றவாளிகள் மூவருக்கு மரண நிறைவேற்றப்படவுள்ளது.

டென்னசி, அலபாமா மற்றும் ஓக்லஹோமாவில் ஆகிய இடங்களில் 66 வயது அந்தோனி டாரெல் ஹைன்ஸ், 41 வயது ஜெர்மி வில்லியம்ஸ் மற்றும் 71 வயது கார்லோஸ் கியூஸ்டா-ரோட்ரிக்ஸ் ஆகிய கைதிகளுக்குத் மரணதண்டனை திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நீண்ட காலமாக மரண தண்டனைக்கு முக்கிய ஆதரவாளராக இருந்து வருகிறார், மரண தண்டனை என்பது "அமெரிக்க குடிமக்களுக்கு எதிரான மிகவும் கொடூரமான குற்றங்கள் மற்றும் கொடிய வன்முறைச் செயல்களைச் செய்பவர்களைத் தடுக்கவும் தண்டிக்கவும் ஒரு இன்றியமையாத கருவி" என்று விவரிக்கிறார்.

2020ம் ஆண்டில், ஆறு மாத காலத்திற்குள் 13 மரணதண்டனைகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!