‘எல் நினோ’ தாக்கம்: 2027 ஏப்ரல் வரை வறட்சி நீடிக்கும் அபாயம்!
#SriLanka
#Lanka4
#drought
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
4 hours ago
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை, ‘எல் நினோ’ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் மேலும் தீவிரமடையக்கூடும் என்றும், அதன் விளைவுகள் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சக்திவாய்ந்த ‘எல் நினோ’ நிலை உருவாகுவதற்கான சாத்தியம் 80 சதவீதத்திற்கும் அதிகமாக காணப்படுவதாகத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் இலங்கை முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மழைவீழ்ச்சி மீண்டும் குறையக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே