யாழ். போதனா வைத்தியசாலையில் உறுப்பு தானத்தின் மகத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி!
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை, வடக்கு உறுப்பு மாற்றுச் சிகிச்சை சங்கம் மற்றும் யாழ்ப்பாண மருத்துவச் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில், உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்றுச் சிகிச்சையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஆரம்பமான பேரணி, பலாலி வீதி, நாவலர் வீதி, கே.கே.எஸ். வீதி மற்றும் வைத்தியசாலை வீதி வழியாகச் சென்று மீண்டும் வைத்தியசாலையை வந்தடைந்தது.
இதில் வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், மருத்துவபீட மாணவர்கள், தாதிய மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் நிறைவில், மூளைச்சாவடைந்த நிலையில் தமது உறுப்புகளைத் தானமாக வழங்கி பிறருக்கு மறுவாழ்வு அளித்த கொடையாளர்களை நினைவுகூரும் வகையில், அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட விசேட நினைவுப் பகுதியும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டது.
உயிரிழந்த பின்னரும் பிறருக்கு வாழ்வளிக்கும் உறுப்பு தானம் – மனிதநேயத்தின் உன்னத அடையாளம்!
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே