இந்தோனேசியாவில் சுவிட்சர்லாந்து நாட்டவருக்கு ஓராண்டு காலம் சிறை தண்டனை விதிப்பு
#Arrest
#Prison
#Indonesia
#LANKA4
#Swiss
#Religion
#citizen
#L4
Prasu
3 hours ago
இந்தோனேசியாவிற்கு சுற்றுலாச் சென்ற சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.
பாலினீசிய இந்துக்களின் புனிதமான அனுசரிப்பை அவமதித்ததற்காக சுவிஸ் நாட்டவருக்கு ஓராண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
26 வயதான லூசியன் ஆண்ட்ரின் ஸ்க்ராகன் என்ற நபருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வீட்டிலேயே தங்கி, அமைதியாக இருந்து தியானம் செய்யுமாறு அறிவுறுத்தப்படும் ‘மௌன நாள்’ குறித்து சமூக ஊடகங்களில் செய்திகளைப் பதிவிட்டதன் மூலம், இந்தோனேசியாவின் புதிய குற்றவியல் சட்டத்தை மீறியுள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் தங்கியிருந்த வில்லாவின் ஊழியர்கள் கட்டுப்பாடுகள் குறித்து அவருக்குத் தெரிவித்த பின்னரும் கூட அவர் அந்தச் செய்திகளைப் பதிவிட்டதாக நீதிமன்றம் கண்டறித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே