விரிவான பரிசோதனைக்கு பிறகு மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்ட இம்ரான் கான்

#Hospital #Prison #Pakistan #Medical #LANKA4 #ImranKhan #L4
Prasu
1 hour ago
விரிவான பரிசோதனைக்கு பிறகு மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்ட இம்ரான் கான்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையிலிருந்து அடியாலா சிறைக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ளார். 

கான் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்ட பின்னர், அவர் காவலில் இருப்பது பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் கருதியதால், அவர் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார் என பாகிஸ்தானிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

"கண் மருத்துவர், இதய மருத்துவர் மற்றும் பொது மருத்துவர் உள்ளிட்ட தகுதிவாய்ந்த மருத்துவர்கள் குழு ஒன்று, அவரை விரிவாகப் பரிசோதித்து அவர் மருத்துவ ரீதியாக நலமாக இருப்பதாக அறிவித்தது" என்று கானின் உடல்நலப் பரிசோதனைகள் குறித்து தகவல் அமைச்சர் அத்தாவுல்லா தாரார் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மருத்துவப் பரிசோதனைக்காக கானை ஷிஃபா சர்வதேச மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்குப் பதிலாக அவர் அரசு நடத்தும் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (PIMS) அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4