எல்-நினோ தாக்கம்: கடும் வறட்சியை எதிர்கொள்ள விசேட திட்டம்!

#SriLanka #LANKA4 #drought #ADDA #ADDAADS #SHELVA #ADDAPOOJA
Lakhi
2 hours ago
எல்-நினோ தாக்கம்: கடும் வறட்சியை எதிர்கொள்ள விசேட திட்டம்!

எல்-நினோ காலநிலைத் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவுடனான கலந்துரையாடலில், இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டேன்.

தற்போது ஏற்பட்டிருக்கும் எல்-நினோ நிலைமையினால் எழுந்துள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காண எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் இங்கு ஆராயப்பட்டதுடன், கடந்த சிறு போகத்தில் முழுமையான தயார்நிலையுடன் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் பயிர்ச் சேதங்கள் குறைவாக உள்ளதாகவும், மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய முடிந்துள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டன.

மேலும், எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏற்படக்கூடும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ள கடுமையான வறட்சிக்கு முகங்கொடுக்க தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்கள், குறிப்பாக நீர் மற்றும் மின்சார முகாமைத்துவம், விவசாய நடவடிக்கைகள், தொழிற்துறைகளைப் பாதுகாப்பதற்கான உத்திகள் தொடர்பாகவும் இங்கு ஆராய்ந்ததுடன், அந்தக் காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களும் சேவைகளும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்கு முன்கூட்டிய திட்டங்களைத் தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினேன்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4