இளைஞர்கள் போராட்டம்: இன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அவசரக் கூட்டம்!
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது.
கடந்த ஜூலை 25ஆம் திகதி போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், அப்போது மத்திய அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பது குறித்து இன்றையக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது.
நீட் முறைகேடு மற்றும் கல்வித்துறை குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தின் போது முன்வைக்கப்பட்டிருந்தன.
இதனை ஏற்று மத்திய கல்வி அமைச்சரும் பதவி விலகினார்.
இந்தநிலையில், மத்திய அரசு வழங்கிய ஏனைய வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கினால், அமைதியான முறையில் நாடு தழுவிய மற்றொரு போராட்டத்தை முன்னெடுப்பது உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளும் பரிசீலிக்கப்படும் என கரப்பான் பூச்சி ஜனதாக்கட்சி எச்சரித்துள்ளது.
அத்துடன், போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான விபரங்களை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை என்றும் அந்தக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே