தொலைநோக்கற்ற நிர்வாகத்தால் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் – சஜித்!

#SriLanka #people #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
தொலைநோக்கற்ற நிர்வாகத்தால் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் – சஜித்!

தற்போதைய அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற நிர்வாகத்தின் காரணமாக நாட்டின் பொதுமக்கள் தீவிர பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம், மதவாச்சி - யக்காவெவ பகுதியில் நடைபெற்ற ஜக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பொய்யான வாக்குறுதிகள் காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

நாட்டின் பெருமளவிலான மக்கள் அன்றாட அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் ஒரே மாற்றுச் சக்தியாக ஜக்கிய மக்கள் சக்தி விளங்குகின்றது. விவசாய சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, தொழிற்துறையைப் பலப்படுத்தி, புதிய உற்பத்தித் திட்டங்கள் ஊடாகவே விரைவான அபிவிருத்தியை அடைய முடியும்.

 எனவே, கிராமங்களையும் நகரங்களையும் சீரமைத்து நாட்டைப் பலப்படுத்தும் புதிய வேலைத்திட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4