“பஸ் லலித்” இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!
#SriLanka
#Bus
#LANKA4
#ADDA
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
1 day ago
துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான "பஸ் லலித்" எனப்படும் லலித் கன்னங்கர என்பவர், மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
''பஸ் லலித்" இன்று (25) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையம் ஊடாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
சந்தேகநபரை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக கடந்த நாட்களில் இலங்கையிலிருந்து விசேட குழுவொன்று துபாய்க்கு புறப்பட்டுச் சென்றிருந்தது.
இதற்கமைய, மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் குறித்த சந்தேகநபர் துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே