மரண அறிவித்தல் - S. சதுமியா

#SriLanka #Batticaloa #Death #Student #LANKA4 #ANUTHAPAM #L4
Prasu
1 hour ago
மரண அறிவித்தல் - S. சதுமியா

மட்டக்களப்பு – வாழைச்சேனை, சுங்காங்கேணியைச் சேர்ந்த 17 வயதான S. சதுமியா என்ற மாணவி சுகவீனம் காரணமாக 25.08.2026 அன்று உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

மட்/ககு/சுங்காங்கேணி வலம்புரி விநாயகர் வித்தியாலயத்தில் தரம் 12 கல்வி கற்று வந்த சதுமியா, சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று, பல்வேறு கனவுகளுடன் தனது கல்விப் பயணத்தைத் தொடர்ந்து வந்த இளம் மாணவி வாழ்க்கையின் அழகான பருவத்தில், பல கனவுகளுடன் பயணித்த ஒரு இளம் உயிர் இவ்வாறு திடீரென எம்மை விட்டுப் பிரிந்திருப்பது மிகவும் வேதனையானது.

இந்த இழப்பால் துயருற்றிருக்கும் அவரது பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அமரத்துவம் அடைந்த மாணவி சதுமியாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம். அன்னாரின் குடும்பத்தினரின் துயரத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்வோம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4