திடீரென தரையிறங்கிய அமெரிக்க போர் ஜெட் - உன்னிப்பாகக் கண்காணிக்கும் சீனா!

#America #world_news #Russia #War
Soruban
5 hours ago
திடீரென தரையிறங்கிய அமெரிக்க போர் ஜெட் - உன்னிப்பாகக் கண்காணிக்கும் சீனா!

ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே உக்ரைன் போர் காரணமாக கடுமையான பனிப்போர் சூழல் நிலவி வரும் நிலையில், மாஸ்கோவின் வ்னுகோவோ சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று திடீரென தரையிறங்கியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்கோவில் அமெரிக்க விமானப்படை விமானம் திடீரென தரையிறங்கியுள்ள சூழலையும், அதன் பின்னணியில் உள்ள நகர்வுகளையும் சீனா மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

விமானப் போக்குவரத்து தகவல்களை கண்காணிக்கும் Flightradar24 இணையதளத்தின் தரவுகளின்படி, அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட போயிங் சி-17 குளோப்மாஸ்டர் ரக ராணுவ விமானம் ஒன்று மாஸ்கோவிற்கு வந்தடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விமான கண்காணிப்பு தரவுகளின்படி, இந்த குளோப்மாஸ்டர் விமானம் வாஷிங்டன் டி.சி. அருகே உள்ள புகழ்பெற்ற கேம்ப் ஸ்பிரிங்ஸ் / ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் விமான தளத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த ஆண்ட்ரூஸ் தளம் தான் அமெரிக்க அதிபர், துணை அதிபர் மற்றும் நாட்டின் உயர்மட்ட தூதர்கள், ராணுவ ஜெனரல்கள் அதிகாரப்பூர்வ பயணங்களுக்கு பயன்படுத்தும் மிக முக்கியமான விமான தளமாகும்.

அங்கிருந்து புறப்பட்ட விமானம், ஆகஸ்ட் 23 அன்று லாட்வியா நாட்டின் ரிகா நகருக்கு சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து இன்று காலை புறப்பட்டு நேரடியாக மாஸ்கோவின் வ்னுகோவோ விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்ய வான்வெளியில் மேற்கத்திய நாடுகளின் விமானங்கள் பறக்க கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ள சூழலில், அமெரிக்க ராணுவ விமானம் மாஸ்கோவில் நுழைந்தது உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4