நாட்டில் நிலவும் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பில் வானிலை ஆய்வுத் திணைக்களம் எச்சரிக்கை
காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடல் பகுதிகளுக்கும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடல் பகுதிகளுக்கும் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பில் வானிலை ஆய்வுத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை நாளை (27) காலை 10.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாக காணப்படுவதுடன், மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடலோரப் பகுதிகளுக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் அலைகளின் உயரம் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், குறித்த கடற்பகுதிகளில் பயணிக்கும் மீனவர்கள் மற்றும் கடற்பயணிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே