லண்டன் விமான நிலையத்தில் உறைந்த நிலையில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு
கேட்விக் விமான நிலையத்தில், விமானத்தின் சக்கரப் பகுதிக்குள் அடையாளம் தெரியாத பயணி ஒருவர் குளிரில் உறைந்து இறந்து கிடந்ததாக ஒரு விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் மொராக்கோவிலிருந்து வந்த ஏர் அரேபியா விமானத்தின் தரையிறங்கும் சக்கரப் பகுதிக்குள் (landing gear) மறைந்திருந்த நிலையில், அடையாளம் தெரியாத அந்த நபர் கண்டெடுக்கப்பட்டார்.
பிரேதப் பரிசோதனையில், மாரடைப்பு, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை (hypoxia) மற்றும் உடல் வெப்பநிலை குறைவு (hypothermia) ஆகியவையே மரணத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
மேற்கு சசெக்ஸ் பிரைட்டன் மற்றும் ஹோவ் பகுதி மரண விசாரணை அதிகாரி ஜோசப் டர்னர், சக்கரப் பகுதிக்குள் நிலவிய சூழல் மிகவும் குளிராக இருந்திருக்கும் என்று குறிப்பிட்டார்.
‘இந்த மரணம் இயற்கைக்கு மாறானது என்று நம்புவதற்குத் தன்னிடம் காரணம் உள்ளது’ என்ற அடிப்படையில் விசாரணையை முறைப்படித் தொடங்கிய அவர், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே