மாற்றுத்திறனாளி பிள்ளைகளின் ஆரோக்கியம் குறித்து சமூக விழிப்புணர்வு அவசியம்!
மாற்றுத்திறனாளி பிள்ளைகள் சமூகத்தில் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்களுக்கு உள்ளாகாத வகையில், அவர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தின் ஏனைய தரப்பினரை அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
வெனிவெல்கொலவில் அமைந்துள்ள “ஷிஷ்யோதா விசேட மற்றும் உள்ளடக்கிய கல்வி தொடர்பான தேசிய நிறுவனத்திற்கு” நேற்று மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனத்தை, தரமான கல்வியை வழங்குவதுடன் உள்ளடக்கிய கல்வியின் இலக்குகள் மற்றும் நோக்கங்களை நிறைவேற்றும் நிறுவனமாக மாற்றுவதற்கான முறையான செயன்முறையொன்றை உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே