ஓணம் பண்டிகையை முன்னிட்டு உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்களுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர்

#Tamil Nadu #Festival #LANKA4 #Vijay #ChiefMinister #Kerala #L4
Prasu
1 hour ago
ஓணம் பண்டிகையை முன்னிட்டு உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்களுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர்

கேரள மக்கள் அனைவரும் பாகுபாடின்றி, மிகவும் மகிழ்ச்சியோடு எதிர்நோக்கும் ஒரு திருவிழா, ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் வரும் திருவோண நட்சத்திரமான இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் மகாபலி சக்கரவர்த்தி, தன் நாட்டிற்கு விஜயம் செய்வதாக நம்பிக்கை. எனவே, அவரை வரவேற்கும் நாளாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், ஓணம் திருநாளையொட்டு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! 

அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்! அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4