ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்
மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆனைச்சேனை பகுதியில், தி/அல்ஹிதாயா பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள சுமார் 40 வருடங்கள் பழமையான பாலம் திக்வா புயலினால் சேதமடைந்த நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலாக புதிய பாலம் அமைப்பதற்காக ரூ.1 கோடியே 50 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த இந்தப் பாலத்தின் ஊடாக தினந்தோறும் வாகனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயணிப்பது பெரும் அச்சுறுத்தலாக இருந்ததால், புதிய பாலம் அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாலம் நிர்மாணப் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் பிரதம அதிதிகளாக தேசிய மக்கள் சக்தி (NPP) மூதூர் அமைப்பாளர் கே.எம். சப்றான் மற்றும் NPP பிரதேச சபை உறுப்பினர் றிபான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அரச திணைக்கள உத்தியோகத்தர்கள், Clean Sri Lanka மூதூர் இணைப்பாளர் ரம்சி, பாடசாலை அதிபர், பிரஜா சக்தி தலைவர், RDS தலைவர், பள்ளிவாசல் தலைவர், NPP மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
மூதூர் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நீண்டகாலமாக மக்களால் எதிர்பார்க்கப்பட்ட அடிப்படை வசதிகளை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, மூதூர் பிரதேசத்தின் நீண்டகால அபிவிருத்தித் தேவைகள் கடந்த காலங்களில் போதியளவில் கவனிக்கப்படவில்லை எனவும், பல ஆண்டுகளாக மக்களின் அடிப்படை வசதிகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை எனவும் நிகழ்வில் கலந்து கொண்ட சிலர் கருத்து தெரிவித்தனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே