அரச பயணமாக இரு மத்திய ஆசிய நாடுகளுக்கு புறப்பட்ட இந்திய பிரதமர்

#India #PrimeMinister #LANKA4 #Uzbekistan #Visit #NarendraModi #L4
Prasu
1 month ago
அரச பயணமாக இரு மத்திய ஆசிய நாடுகளுக்கு புறப்பட்ட இந்திய பிரதமர்

இந்திய பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக சென்றுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது முதலாவதாக உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட்டில் ஜனாதிபதி ஷவ்காத் மிர்சியோயேவுடன் பிரதமர் மோடி, இந்தியா-உஸ்பெகிஸ்தான் மூலோபாயக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.

அங்கு இரு நாட்கள் இருந்துவிட்டு பின்னர் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய திகதிகளில் 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டிற்காக கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக் செல்கிறார்.

புறப்படுவதற்கு முன்னதாகப் பிரதமர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், மத்திய ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் மூலோபாயப் பங்களிப்பை வலுப்படுத்துவதிலும், அப்பகுதியுடனான உறவுகளை ஆழப்படுத்துவதிலும் இந்தப் பயணம் கவனம் செலுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!