சூரியனின் உச்சம்:இலங்கையில் ஏற்படப்போகும் மாற்றம்!
இலங்கையின் பல பகுதிகளில் இன்று (30) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சபரகமுவ மாகாணம், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்பதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாட்டின் பல பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக ஆகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 7 வரை இலங்கைக்கு அண்மையிலுள்ள அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலாக சூரியன் உச்சம் கொடுத்து வருகின்றது.
அதன்படி, இன்று (30) நண்பகல் 12.11 மணியளவில் மன்னார், பெரியமடு, புளியங்குளம், வெலிஓயா மற்றும் புல்மோட்டை ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே