விசாரணைக்கு முன்னிலையாகிறார் ரவி கருணாநாயக்க!

#SriLanka #LANKA4 #ravi karunanayake #inquiry #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
5 hours ago
விசாரணைக்கு முன்னிலையாகிறார் ரவி கருணாநாயக்க!

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் தினமொன்றில் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

தேசிய லொத்தர் சபைக்கு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்தமை தொடர்பான விசாரணைக்காக, ரவி கருணாநாயக்க ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று பத்தரமுல்லை, ரஜமல்வத்த வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு சென்றுள்ளது.

எனினும், அப்போது ரவி கருணாநாயக்க வீட்டில் இல்லாததால் அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

குறித்த தினத்தில் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாத நிலையில், தனது சட்டத்தரணிகள் ஊடாக வேறு ஒரு தினத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததாகவும், அதற்கு ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, ரவி கருணாநாயக்க எதிர்வரும் தினமொன்றில் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4