இரவு 10 மணிக்குப் பின் ஒலிபெருக்கிகளுக்கு கட்டுப்பாடு!

#SriLanka #LANKA4 #speaker #Restriction #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
4 hours ago
இரவு 10 மணிக்குப் பின் ஒலிபெருக்கிகளுக்கு கட்டுப்பாடு!

பொதுமக்களின் அமைதிக்கும் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கி மற்றும் ஒலிபெருக்கிச் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனுமதிப்பத்திரம் பெறப்பட்டிருப்பினும், திங்கள் முதல் வியாழன் வரையிலான நாட்களில் இரவு 10 மணி வரையிலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு ஒரு மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12.30 வரையிலும் மட்டுமே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.

கட்டுப்பாடுகளை மீறுபவர்களின் ஒலிபெருக்கிச் சாதனங்கள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

சட்டவிரோத ஒலி மாசுபாடு தொடர்பில் 118 அல்லது 119 அவசர இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4