நேபாள வெள்ளத்தில் காணாமல் போன சிட்னியில் வசிக்கும் யாழ்ப்பாண தமிழ் குடும்பம்
#Jaffna
#Australia
#Tamil
#LANKA4
#Flood
#Nepal
#Missing
#family
#L4
Prasu
2 hours ago
நேபாள வெள்ளத்தில் சிட்னி யாழ்ப்பாணத் தமிழ் குடும்பம் காணாமல் போயுள்ளது.
நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்துக்குப் பின்னர், சிட்னியில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சந்திரசேகரன் முரளிதரன் (47), அவரது மனைவி ஷைலஜா (42), மகன்கள் அஷ்வின் (14), ஆருஷ் (11) ஆகிய நால்வரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினர் உயிரிழந்ததாக இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் உறவினர்கள் காத்திருக்கின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே