வடக்கில் அபிவிருத்தி பணிகள்: அரசுக்கு நன்றி!

#SriLanka #government #Development #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
4 hours ago
வடக்கில் அபிவிருத்தி பணிகள்: அரசுக்கு நன்றி!

யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், வடக்கில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக குளங்கள் புனரமைப்பு, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பித்தல், கிளிநொச்சியில் வீதி அபிவிருத்தி மற்றும் வீதி அகலப்படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்படுவது வரவேற்கத்தக்க விடயமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் வாழ்வாதாரத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், இதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு மனமார்ந்த நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இனவாத அரசியலைக் கடந்து காலத்திற்கு ஏற்ப தமிழ் அரசியல் கட்சிகள் தமது அணுகுமுறைகளை மாற்றிக்கொண்டு, மக்களின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4