பிணை பெற நீதிபதியை மிரட்டல் – சுகேஷுக்கு 8 ஆண்டு சிறை

#SriLanka #Prison #LANKA4 #Judge #Bail #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
பிணை பெற நீதிபதியை மிரட்டல் – சுகேஷுக்கு 8 ஆண்டு சிறை

நீதிபதியை அச்சுறுத்தி பிணை பெற முயன்ற வழக்கில், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்துள்ளது.

2017ஆம் ஆண்டு சிறையில் இருந்தபோது, சிறைக் காவலரின் கைபேசியைப் பயன்படுத்தி சிறப்பு நீதிபதி பூனம் சவுத்ரியைத் தொடர்புகொண்ட சுகேஷ் சந்திரசேகர், தன்னை உயர்நீதிமன்ற நீதியரசரின் தனிப்பட்ட செயலாளர் எனக் கூறி, விடுதலை செய்யுமாறு அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கூறிய தகவல்கள் பொய்யானவை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அரசு ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்தது, அரசு ஊழியரை அச்சுறுத்தியது மற்றும் குற்றவியல் அச்சுறுத்தல் ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு மொத்தம் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் திகார் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகருக்கு எதிராக நாடு முழுவதும் சுமார் 30 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4