உணவு முறைமைகளை நிலைத்தன்மைமிக்கதாக மாற்ற கூட்டு நடவடிக்கை அவசியம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

#SriLanka #PrimeMinister #LANKA4 #ADDA #Harini Amarasooriya #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
உணவு முறைமைகளை நிலைத்தன்மைமிக்கதாக மாற்ற கூட்டு நடவடிக்கை அவசியம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

பூட்டானில் நடைபெற்ற Global Conscious Food Systems Summit 2026 இன் உயர்மட்டக் குழு விவாதத்தில் கலந்துகொண்ட இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்றைய ஒன்றோடொன்று தொடர்புடைய பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு விழிப்புணர்வு மாத்திரம் போதுமானதல்ல என வலியுறுத்தினார்.

“Rising to the Moment: Igniting Consciousness to Address the Polycrisis” என்ற தலைப்பிலான அமர்வில் உரையாற்றிய பிரதமர், விழிப்புணர்வை கூட்டுச் செயல்பாடாக மாற்றுவதுடன், பொறுப்புகளை அளவிடக்கூடிய பெறுபேறுகளாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

காலநிலை நடவடிக்கைகள், விவசாயத் துறையின் புத்தாக்கம், பொறுப்புமிக்க நுகர்வு, உணவு விரயத்தைக் குறைத்தல், விவசாயிகளுக்கான ஆதரவு மற்றும் ஊட்டச்சத்திற்கான சமமான வாய்ப்புகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் மீள்திறன்மிக்க, அனைவரையும் உள்ளடக்கிய, நிலைத்தன்மைமிக்க மற்றும் நியாயமான உணவு முறைமைகளை உருவாக்க முடியும் என பிரதமர் தெரிவித்தார்.

மேலும், அபிவிருத்தியும் நிலைத்தன்மையும் இணைந்து முன்னோக்கிச் செல்லக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதற்காக சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், காலநிலை நிதி மற்றும் தொழில்நுட்பத்திற்கான சமமான அணுகலையும் மேம்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

பூட்டானில் ஆகஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 4 வரை நடைபெறும் இந்த முதலாவது Global Conscious Food Systems Summit, பூட்டான் அரசு, Conscious Food Systems Alliance (CoFSA) மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் நடைபெறுகிறது.

உணவு முறைமைகளின் மாற்றத்தில் விழிப்புணர்வு, விழுமியங்கள், கலாசாரம், ஆன்மீகம் மற்றும் உள்ளார்ந்த மாற்றத்தின் பங்களிப்பை இந்த மாநாடு ஆராய்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4