‘அட்லஸ் ஏஞ்சல் 2026’ – செப். 04ல் கொழும்பில் கூட்டு இசை நிகழ்ச்சி
‘அட்லஸ் ஏஞ்சல் 2026’ – செப். 04ல் கொழும்பில் கூட்டு இசை நிகழ்ச்சி கொழும்பு: இலங்கை விமானப்படை கலைப்பிரிவும் அமெரிக்க பசுபிக் விமானப்படை இசைக்குழுவும் இணைந்து வழங்கும் ‘Fusion Performance – Atlas Angel 2026’ விசேட கூட்டு கலாசார இசை நிகழ்ச்சி எதிர்வரும் செப்டெம்பர் 04ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உள்ள Arcade பகுதியில் நடைபெறவுள்ளது.
மாலை 5.30 மணி முதல் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் இரு நாடுகளின் விமானப்படை கலைப்பிரிவுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இசை நிகழ்ச்சிகள், பாரம்பரிய மற்றும் கலாசார நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் இதன்போது இடம்பெறவுள்ளன.
இலங்கை மற்றும் அமெரிக்க விமானப்படைகளுக்கு இடையிலான கலாசார பரிமாற்றத்தையும் நட்புறவையும் வலுப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியை பொதுமக்கள் இலவசமாகக் கண்டுகளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே