எல்நினோ தாக்கம் - வேலையிழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஆய்வு
தற்போது நிலவிவரும் எல் நினோ காலநிலையால் ஏற்பட்டுள்ள வேலையிழப்பு அபாயத்தை கையாள்வதற்கும், வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எல் நினோவின் தாக்கத்தைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அமைச்சரவை துணைக்குழு, ஜனாதிபதி செயலகத்தில் தனது நான்காவது கூட்டத்தை நடத்தியபோது, இது தொடர்பான யோசனைகளை சமர்பித்துள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் தம்மிகா படபெண்டி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாதகமான காலநிலை நிலவுவதால் வேலைவாய்ப்பு பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும், வேலை இழந்தவர்களுக்கான சாத்தியமான நிவாரணம் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆறு மாவட்டங்களில் உள்ள மக்கள் எல்நினோ தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே