22வது திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது இன்று விசாரணை

#SriLanka #Court #Amendment
Thamilini
1 hour ago
22வது  திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது இன்று விசாரணை

அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22வது திருத்தத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான எழுத்துப்பூர்வ வாதங்கள் இன்று (3) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன.

பிரதம நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தது. 

22வது சட்டத் திருத்தம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 65-லிருந்து 67 ஆக உயர்த்தக் கோருகிறது. மேலும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 63-லிருந்து 65 ஆக உயர்த்தவும் முன்மொழிந்துள்ளது. 

இதனை எதிர்த்து 65இற்கும் மேற்பட்டவர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அத்துடன் பாராளுமன்றத்தின் பொதுவாக்கெடுப்பும் தேவை என வாதிட்டுள்ளனர். 

எவ்வாறாயினும் இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்றுடன் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4