காட்டு யானை தாக்கியதில் யாத்ரீகர்களின் பேருந்து விபத்து – பலர் காயம்
#SriLanka
#Elephant
#Bus
#LANKA4
#Injury
#Pilgrims
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
புத்தளம்–கதிர்காமம் பிரதான வீதியில், யால சரணாலயத்திற்கு அருகில் இன்று (03) காட்டு யானை தாக்கியதில் யாத்ரீகர்கள் பயணித்த பேருந்தொன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வீதியைக் கடந்துகொண்டிருந்த காட்டு யானை பேருந்தை தாக்கியதாகவும், இதனால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் பேருந்தில் பயணித்த பல யாத்ரீகர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் காயமடைந்தவர்களின் நிலை குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே