கிளிநொச்சியில் அதிக வேகத்தால் 22 வயது இளைஞன் மரணம்

#SriLanka #Death #Accident #LANKA4 #Bike #Speed #L4
Prasu
3 hours ago
கிளிநொச்சியில் அதிக வேகத்தால் 22 வயது இளைஞன் மரணம்

உருத்திரபுரம் இந்துக் கல்லூரி பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் குறித்த இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய புஷ்பராசா சமர்நிலவன் என்ற இளைஞனே குறித்த விபத்தில் பரிதாபகரமான உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4