கோடை வெப்ப அலைகள் காரணமாக பெல்ஜியத்தில் கிட்டத்தட்ட 3,000 இறப்புகள் பதிவு
வடக்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில், இந்த கோடைக்காலம் வரலாற்றிலேயே மிகவும் வெப்பமானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் முதல் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெப்ப அலைகளின் போது கிட்டத்தட்ட 3,000 கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தப் பருவத்தின் மூன்றாவது வெப்ப அலையின் கீழ் பெல்ஜியம் தகித்த ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 16 வரையிலான காலகட்டத்தில் சுமார் 365 கூடுதல் இறப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்தக் காலகட்டத்தில்தான், நவீன வரலாற்றில் நாட்டின் மிக மோசமான காட்டுத்தீயும் தொடங்கியது.
ஜூன் 18 முதல் ஜூலை 3 வரையிலான காலகட்டத்தில், பெல்ஜியத்தில் 49 சதவீத கூடுதல் இறப்பு விகிதம் பதிவாகியுள்ளது, இதில் 2,035 கூடுதல் இறப்புகள் அடங்கும்.
ஒரு அறிக்கையின்படி, ஜூலை 4 முதல் 17 வரை வழக்கத்தை விட கூடுதலாக 535 பேர் உயிரிழந்தனர். இதனால், கோடைக்காலத்தில் ஏற்பட்ட மொத்த கூடுதல் இறப்புகளின் எண்ணிக்கை 2,935 ஆக உயர்ந்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே