நேபாளத்தை தொடர்ந்து கனடாவில் ஏற்படப்போகும் பேரழிவு - நிபுணர்கள் எச்சரிக்கை!

#CANADA #LANKA4 #Warning #Climate #Snow #Disaster #L4
Prasu
2 hours ago
நேபாளத்தை தொடர்ந்து கனடாவில் ஏற்படப்போகும் பேரழிவு - நிபுணர்கள் எச்சரிக்கை!

நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட பேரழிவு, கனடாவின் மலைப்பகுதிகளிலும் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது.

புவி வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் உருகுவதும், உறைபனி நிலம் தளர்வதும் புதிய இயற்கை பேரிடர்களை உருவாக்கி வருவதாகக் கனடாவின் முன்னணி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சஸ்காட்செவன் பல்கலைக்கழகத்தின் 'க்ளோபல் வாட்டர் ஃபியூச்சர்ஸ் அப்சர்வேட்டரீஸ்' திட்டத்தின் இயக்குனர் ஜான் பொமரோய் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகில் அதிக பனிப்பாறைகளையும், பரந்த உறைபனி நிலங்களையும் கொண்ட நாடான கனடாவில் பனி உருகும் வேகம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகவும், இதுவரை கண்டிராத புதிய ஆபத்துகள் உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4