தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த இரட்டை சகோதரிகள்
2026ம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், புசல்லாவை இந்து ஆரம்பப் பாடசாலையில் பயிலும் இரட்டைச் சகோதரிகள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுச் சித்தியடைந்துள்ளனர்.
170 புள்ளிகள் பெற்ற கார்த்திக் கபிஷ்கா மற்றும் 146 புள்ளிகள் கார்த்திக் கனிஷா ஆகிய சகோதரிகளே இவ்வாறு சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
அதேவேளை, புசல்லாவை இந்து ஆரம்பப் பாடசாலையிலிருந்து இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் 24 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுச் சித்தியடைந்துள்ளனர்.
100 சதவீதச் சித்தியைப் பெற்று கம்பளைக் கல்வி வலயத்தில் மீண்டும் சாதனை படைத்துள்ள புசல்லாவை இந்து ஆரம்பப் பாடசாலையின் அதிபர், மாணவர்களை வெற்றிகரமாக வழிநடத்திய வகுப்பாசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாடசாலையின் பழைய மாணவர்களும் கல்விச் சமூகத்தினரும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே