தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து - பெண் ஒருவருக்கு காயம்
#SriLanka
#Police
#Accident
#Investigation
#Road
Thamilini
2 hours ago
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த ஒரு சொகுசு கார், சாலையிலிருந்து விலகி பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில், வாகனத்தில் பயணித்த பெண் ஒருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
குறித்த வாகனம் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) மாத்தறைக்கு சென்றுக்கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே